Follow by Email

Wednesday, 3 April 2013

மேஷ லக்னம் ஓர் அறிமுகம்ஜோதிட சாஸ்திரத்தில் ஆதி முதல் ராசி. இதன் அதிபதி செவ்வாய். ஆண் ராசி. இதன் அதிபதியான செவ்வாயும் ஒரு ஆண் கிரகமே. 

முரட்டுத்தனமும் பிடிவாத போக்கையும் கொண்டது. திசைகளில் கிழக்கை குறிக்கும். இது ஒரு பாவ ராசி. மனித அவயங்களில் தலைப்பகுதியை குறிக்கும் ராசி. 

ஆனால் இது குட்டை ராசி. இந்த ராசியில் பிறந்தவர்கள் குட்டையான   உருவம் கொண்டிருந்தாலும் வாட்டசாட்டமான சட்டம் மாதிரி உடலை பெற்றிருப்பார்கள். 

ஒரு குடும்பத்தில் தலைச்சன் பிள்ளை ஆண் பிள்ளையாக இருந்தால் மேஷ லக்கனத்தில் பிறகும் என்று சொல்லப்படுகிறது. இது பெரும்பாலும் ஒத்தே போகிறது.

மேஷ லக்கனத்தில்   பிறந்தவர்களுக்கு உடன் பிறப்புகள் நிறைய உண்டு. இது ஒரு வறண்ட ராசி. இரவில் வலுவுடையது. நெருப்பு ராசியும் கூட. இதில் உச்சம் பெறும் கிரகம் சூரியன். நீச்சம் பெறும் கிரகம் சனி. இது ஆடு மாதிரி உருவம் கொண்டது.

மேஷ லக்னம் பொது பலன்கள்

பிறந்தது மேஷ லக்னமா? அப்படியானால் காரியவாதிகள். எதை எதை எப்போ செய்யணுமோ அதை அதை அப்போ செய்ய தெரியும்.

ஒரு பழமொழி இருக்கு. புலியை குட்டியில் கொல்லனும், பாம்பை முட்டையில் கொல்லனும்.  அந்த கலை கற்றவர் தான் நீங்கள்.

ஒன்னை பத்தாக்கணும், விண்ணை சொத்தாக்கணும் என்பது உங்கள் ராஜ கனவு. ஈடுபடும் காரியத்தில் காட்டும் வேகம் இருக்கே... சும்மா அதிரும்முல்ல.

இந்த அணுகு முறையே முரட்டு பிடிவாதம் கொண்டவராக அடையாளம் காட்டும். அது சரி உண்மையும் அதுதானே.

இருப்பினும் ஒன்றை சொல்லியே ஆகணும். சபலம்தான் ஜாஸ்தி. அப்படி இப்படின்னு சந்து பொந்துகளில் சிந்து பாடுவதை நிறுத்த முடியாது.

எப்படியும் ஒரு தொடுப்பு இருக்கும். அது சரி ... சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒத்து போகாத வரை எல்லோருமே நல்லவர் தான். இவரும் நல்லவர்தான் நம்புவோம்.

பொதுவா இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பண புழக்கம் நன்னா இருக்கும். வசதியான வாழ்க்கையும், காணி பூமி சேர்க்கையும் கண்டிப்பாக உண்டு.

உத்தியோகம் பார்ப்பதற்கு உகந்தவர்கள். கறார் பேச்சும் கண்டிப்பு தன்மையும் கோவக்கார ஆசாமி என்ற பட்டத்தை வாங்கி தரும்.

பெரும்பாலும் கவுரவம் பார்ப்பவர்கள்.புலிக்கு வாலாக இருப்பதை விட எலிக்கு தலையாக இருப்பது பெருமை என்று நினைப்பவர்கள்.

அலைச்சல் திரிச்சலுக்கு அலுப்பு படாதவர்கள். பெறும் பகுதி வெளியூர் பயணம் விரும்பி போவார்கள்.


வாழ்க்கையில் ஏதாவது திடீர் கண்டம் ஏற்படுமாம். ஆயுதம் நெருப்பு, கிழே  விழுந்து அடிபடுதல் இப்படி ஏதாவது அசம்பாவிதம் ஏற்படலாம் என்கிறது ஜோதிடம். இது பொது கருத்து.

மேஷ லக்னத்திற்கு அடுத்த திரிகோனமான சிம்மத்தின் அதிபதி சூரிய திசையும், இரண்டாம் அதிபதியான குரு திசையும் நன்மையை செய்யும்.

ஆனால் பாதகாதிபதியான சனியோட சம்மந்தம் அறவே கூடாது. குருவின் சுபத்தன்மை கோவிந்தாதான். சனியின்  தொடர்பு பெற்ற குரு திசை கொடுத்து கவுத்துவிடும்.

3, 6 க்கு அதிபதியான புதனும் பாதகாதிபதியான சனியும் கொல்ல துணிந்தவர்கள். 2, 7 க்கு அதிபதியான சுக்கிரன் மாரக ஆதிபத்தியம் பெற்றாலும் கொல்வதில்லை. நல்லவன்.


இந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு குரு சூரியன் கூடி இருந்தால் பிரபலயோகம். அப்படி ஒரு அமைப்பை பெற்றவர்கள் வாழ்நாளில் எந்த வகையிலாவது முன்னேற்றத்தை எட்டி விடுவார்கள்.

பூர்வபுண்ணியம் என்கிற அடிப்படிக்கு ஏற்றவாறு, வசதி வாய்ப்புகளுக்கு ஏற்றவாறு வாழ்க்கை தரம் அமைந்து விடும்.

ஆனால் சனி + புதன்,  சனி +சுக்கிரன், சனி + செவ்வாய், புதன் + செவ்வாய், குரு + சனி,  ராகு + சனி,  கேது + செவ்வாய்,  இப்படி ஏற்ப்படும் அமைப்பு மேஷ லக்னத்திற்கு மோசமே.

எதிர்பாராத வகையில் எதையாவது செய்து ஜாதகரை தடுமாற செய்து விடும். கடன் தொல்லை, எதிரிகளால் பிரச்சனை, வில்லங்க விககாரங்கள், தொழில் ரீதியில் போட்டி பொறாமை, முடக்கம், நஷ்டம், ஆகியவற்றை தருகிறது.

இது மேற்படி கிரக சேர்க்கை பெற்ற தசா புத்திகளில் நடைமுறைக்கு வரும்.


Post a Comment