ads

Wednesday 24 April 2013

பாவங்களில் இருந்து விடுதலை பெற..!




சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமியன்று சித்ரகுப்த்தன் பிறந்தாராம். 

யார் இந்த சித்ரகுப்த்தன்?

உயிர்களை கவர்ந்து செல்லும் எமனுக்கு உதவியாளராக இருப்பவர். மனிதர்களின் பாவ புண்ணிய கணக்குகளை வைத்திருக்கும் கணக்கப்பிள்ளை. 

சிவபெருமானால் பொற்பலகையில் வரைய பட்டு, பார்வதி தேவியால் உயிர் பெற்றவர் சித்திரகுப்தன்.  ஆனாலும் பிம்மாவை நோக்கி தவமிருந்து ஒரு பசுவின் வயிற்றில் உதித்தார் என்று கூட ஒரு கதை உண்டு. 

எதற்காக இவர் கதை இப்போது? 

காரணம் இல்லாமல் எந்த காரியமும் இல்லை. நாளை சித்ரா பௌர்ணமி. பெளர்ணமிகளில் மிக விஷேசமாக குறிக்கப்படுவது சித்திரா பௌர்ணமி. 

தமிழ் மாதத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் வருகிற முழு நிலவு நாள் சித்திரா பௌர்ணமி அல்லது சித்ரா பூர்ணிமா எனப்படும்.

அக்காலத்தில் காவேரி கடலோடு தொடர்பு கொள்ளும் காவிரி பூம்பட்டினத்தில் இந்த சித்தரா பௌர்ணமியன்று இந்திர விழா எனப்படும்  விழா மிக சிறப்பாக நடைபெற்றதாக சிலப்பதிகார செய்தி கூறுகிறது. 



இந்த பௌர்ணமியன்று சித்திரகுப்த்தனை வழிபாடு செய்யும் போது, மனித பிறவியில் நாம் செய்துவிட்ட பாவங்களின் சுமை குறையும் என்கிறது புராண செய்தி.

சித்திரகுப்த வழிபாட்டில் சித்திரகுப்தனின் உருவம் போல் அரிசிமாவால் எழுதி, அவர் கையில் எழுத்தாணியும்  ஏடும், காதில் குண்டலங்களும் எழுதி பூஜை செய்ய வேண்டும்.

தலைவாழை இலையில் பச்சனங்கள், வடை, பாயசம், அன்னம், தேன் எல்லா காய்கறிகளும் போட்ட கூட்டு நிவேதனம்  செய்ய வேண்டும். சக்கரை   பொங்கல் வைத்து படைப்பது விஷேசம். உப்பில்லாமல் சமைத்து சாப்பிடுவது உத்தமம் என்று கூறப்படுகிறது.

அந்தணர்கள் அல்லது ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். ஏழை பிள்ளைகளுக்கு நோட்டு பென்சில், புத்தகங்கள் வாங்கி கொடுக்கலாம். அரிசி, காய்கறிகள், பருப்பு, போன்றவைகளை முறத்தில் வைத்து குருமார்களுக்கு தட்சணையாக தரலாம்.

இவ்விரதங்கள் இருப்பவர்கள் அறியாமல் செய்த பல பாவங்களில் இருந்து விடுபடுகிறார்கள்.

நீங்களும் செய்து, ஏழைகளுக்கு உதவி, புண்ணியத்தை நாடுங்களேன்.


1 comment:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...