ads

Monday 15 April 2013

நீங்கள் அதிர்ஷ்டசாலியா?




நீங்கள் அதிஷ்டசாலியா என்று உரசிப் பார்க்கும் உரைகல் எது தெரியுமா?

முதல் நிலையில் லக்னம் மற்றும் லக்னாதிபதிதான். 

இவ்விரு நிலைகளை வைத்துதான், உங்கள் வாழ்க்கைப் பாதையில் தவழ்வது தென்றலா, வீசுவது புயலா என்று அறிய முடியும்.

லக்னாதிபதிதான் ஹீரோ. இவர் வலுப்பெற்று விட்டால், கடும் முயற்சிகள் இல்லாமலே காரியங்கள் நடக்கும்.  தொட்டது துலங்கும் என்பது உண்மையாகும். 

எதிரிகள் இல்லாத நிலை. எதிர்ப்புகளை முறியடிக்கும் ஆற்றல் இயற்கையாக அமைந்து விடும். தேவையான பணபலம், தேடிவரும் பக்கபலம் என்று வாழ்க்கைத் தரம்,  நாளும் நாளும் உயரும். 

இவர் வலு குன்றி விட்டால், முயற்சித்த காரியத்தில் முழுத் தடை, முன்னுக்கு பின் முரணான யோசனை, காட்டிற்கும் மேட்டிற்கும் இழுக்கும் எண்ணங்கள், வழுக்கு மரம் ஏறும் வாழ்க்கை சூழல் என்பது  அமைந்து விடும்.

ஒன்பது கிரகங்கள் இருக்கிறது. இதில் மூன்று நான்கு கிரகங்கள் நல்ல நிலையில் இருந்து விட்டாலே போதும், எதிலும் முதல் நிலை இல்லாவிட்டாலும், எதிர் நீச்சல் போடவேண்டி வராது.

உதாரணமாக குரு.

இவர் லக்ன யோகாதிபதியாக இருந்து திசை நடப்புக்கு வந்து விட்டால், பதினாறு வருடங்கள் கவலை இருக்காது. இடை இடையே புத்தியை நடத்தும் கிரகங்கள் சதிவலை பின்னினாலும் சமாளித்து விடலாம்.

அடுத்து சனி.

இவர் யோக நிலையில் அமர்வதற்கு கொடுப்பினை வேண்டும். இவர் பெயரை கேட்டாலே சந்தேகம் தானாக முளைத்துவிடும், பயம் அதில் பல கிளைகளாக கிளைத்து விடும்.

இவர் கர்ம வினைகிரகம். சகல தெய்வங்களின் தூதுவன். நல்லது கேட்டதை தீர்மானிக்கும் நீதிபதி. அதை உறுதியுடன் நடைமுறைப் படுத்தும் ஆற்றல் மிக்கவர்.

அதனால் பயம் கலந்து பார்க்கப் படுகிறார். என்ன செய்ய  சனியின் ஜாதக விஷேசம் அப்படி.

இவர் நல்ல நிலையில் இருந்தால் பத்தொன்பது வருடங்கள் கவலை இல்லாத மனிதர்கள் பட்டியலில் இருக்கலாம்.

அதிர்ஷ்டக் காற்று அடித்துக் கொண்டே இருக்கும். பிறப்பு எப்படி இருந்தாலும் உயர் நிலை பெறுவார் என்று அடித்துக் கூறலாம்.

அடுத்து புதன்.

பாவிகளோடு சேராத புதன், பலம் பெற்று அமருகிற புதன், மூளை பலத்தால் முன்னுக்கு வர வைப்பார். கற்ற கல்வியால் உயர் நிலை பெற வைப்பார்.

முதலாளி யோகத்தை முன்னால் வைத்திருப்பார். அரசு அதிகாரியாக்கி அழகு பார்ப்பார். வங்கி துறையில் இருக்க வைப்பார், வாத்தியார் வேலைக்கும் அனுப்பி வைப்பார்.  ஜோதிடத்துறை கூட இவரின் அருட் கொடை.

புதன் பலம் பெற்று திசையை நடத்தினால் பதினேழு வருடங்கள் உன்னத வாழ்க்கைக்கு உத்திரவாதம்.

அதேபோல் சுக்கிரன்.

சுபிச்சம் தரும் சுக்கிரன்.  ஆட்சி உச்சம் பெற்று விட்டால் சகலமும் வரும், சந்தோசம் வரும், பொன் பொருள், ஆடை ஆபரணங்களை தரும். வளமான வாழ்க்கை, வசதி குறையாத நிலை, செல்வத்தோடு செல்வாக்கும், புகழோடு அந்தஸ்தும் வந்துவிடும்.

ஆக இருபது வருடங்கள் தொல்லைகள் அற்ற நிலை, போகட்டும்.

உங்கள் ஜாதகத்தில் லக்னாதிபதி நல்லவரோ, கெட்டவரோ, லக்னத்தை பார்த்தால் ஆயுள் அதிகரிக்கும், அதிஷ்டம் உடனிருக்கும்.

லக்னாதிபதி லக்ன மறைவில்லாமல் ஆட்சி உச்சம் பெற்றால், பந்தய குதிரையில் முந்திய குதிரை மாதிரி எதிலும் முதல் நிலை, ஏற்றம் குறையாத மாற்றம் என்பது வந்து விடும்.

லக்னத்தின் அதிபதியும், ராசியின் அதிபதியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வது அதிஷ்டத்தின் உச்சம் என்றே சொல்லலாம்.

தடைகளை தாண்டும் தைரியம், பிக்கல் புடுங்கல் இல்லாத வாழ்க்கை, கடன்கள் இல்லாத நிலை, நோய்கள் துரத்தாத சூழல் இயற்கையாக அமைந்து விடும்.

லக்னாதிபதி இடர்தரும் இடத்தில இல்லாமல் இருப்பது, இடர் தரும் கிரகங்களின் தொடர்பை பெறாமல் இருப்பது தான் ஜாதக சிறப்பு.

எத்தனை பேருக்கு இந்த அதிஷ்டம் வாய்க்கும் என்று சொல்வதற்கில்லை. உங்களுக்கு அமைப்பிருந்தால் நீங்கள் அதிஷ்டசாலி என்று சொல்லலாம்.


No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...