Follow by Email

Saturday, 9 March 2013

ஆட்டம் போட்ட மல்லிகா ஷெராவத் ஆஜராக கோர்ட் உத்தரவு!!




2007ஆம் ஆண்டு மும்பையின் ஜே டபிள்யூ மரியத் ஹோட்டலில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் மல்லிகா ஷெராவத் கலந்து கொண்டார். 

கலந்து கொண்டது மட்டுமல்ல ஒத்துகொண்டபடி ஆடை குறைப்பு நடனமாடி வந்தவர்களை இந்திரலோகத்திற்கு அழைத்து சென்றார். 

ஆனால் பரோடா பார் அசோசியேசன் தலைவர் நரேந்திர திவாரிக்கு மட்டும் கண்ணை உறுத்தி விட்டது. அது எப்படி அப்படி ஒரு நடனம் ஆடலாம் என்று வழக்குத் தொடர்ந்திருந்தார். 

அது மட்டுமல்ல இதுக்கெலாம் காரணமான அந்த ஓட்டல் அதிபரையும் பிடிச்சு உள்ளே போடுங்க என்று கூடுதலாக  ஒரு வரியையும் சேர்த்துக்கொண்டார். 

வழக்கம் போல் இந்த வழக்கும் கீழ்கோர்ட்  , மேல் கோர்ட்  என இழுத்தடிக்கப்பட்டு கடந்த 5 ஆண்டுகாலமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 

கடைசியாக வதோரா நீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்க குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதைத் தொடர்ந்து வதோரா நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் வரும் ஏப்ரல் 20-ந் தேதி நேரில் ஆஜராகவேண்டும் என்று மல்லிகா ஷெராவத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. 

கோர்டில் டான்ஸ் நடக்குமா என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
Post a Comment