Follow by Email

Wednesday, 6 March 2013

மிஹின் எயர் லங்கா விமான நிறுவனம் மீது மதுரையில் தாக்குதல்!


தமிழகம் முழுவதும் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை  அரசுக்கு எதிராகவும் போராட்டமும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது.    

இந்நிலையில், மஹிந்த ராஜபக்ஸவுக்கு சொந்தமான விமான நிறுவனமான மிஹின் லங்காவின் அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் இன்று அடித்து நொறுக்கினர்.

அதன் விபரம் பின் வருமாறு.

இன்று காலையில் ஆதித்தமிழர் பேரவையைச் சேர்ந்தவர்கள் திடீரென ரெயில் மறியல் போராட்டம் நடத்த முயன்றனர். ரயில் நிலையம் நோக்கி முன்னேறிய அவர்களை போலீசார் கைது செய்து, அசாதாரண நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள், மதுரை காளவாசல் பகுதியில் உள்ள  மகின் லங்கா நிறுவன புக்கிங் ஆபிசை  திடீரென  அடித்து நொறுக்கினார்கள். கண்ணாடிக் கதவு, கம்ப்யூட்டர், பிரிண்டர், டேபிள் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைந்தன.

கடந்த டிசம்பர் மாதம் 7ம் தேதி முதல் மதுரையில் இருந்து கொழும்புக்கு நேரடி விமான சேவையை, மகின் லங்கா நிறுவனம் தொடங்கியது.  புக்கிங் ஆபிஸ் தாக்கப்பட்டதை தொடர்ந்து போலீசார் மதுரை முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.



Post a Comment