Follow by Email

Thursday, 21 March 2013

நாராயணசாமிக்கு சோனியா டோஸ்!


ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படும் போலிஸ்துறை மாதிரி, மத்திய அரசுக்கு CPI வளைந்து கொடுக்கிறது என்ற குற்றசாட்டு நாடு முழுவதும் எதிரொலிக்கிறது. 

அதிலும் காங்கிரஸ் வந்த பிறகு இந்த குற்றசாட்டு உண்மை என்பது போல்  தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ. ரெய்ட் நடந்திருக்கிறது. 

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன வென்றால், இப்போது யார் உண்மை பேசுகிறார்கள் என்றே தெரியவில்லை. 

நல்ல வேலையாக ஆதிபகவன் படத்தில் நடந்த மாதிரி நாங்கள் ரெய்ட் எதுவும் செய்யவில்லையே என்று CPI  சொல்லவில்லை. அந்த வகையில் நிம்மதி.

இப்போது செய்திகள் வெளியே கசிந்து கொண்டிருக்கின்றன. கூடங்குளத்தில் மின்சார உற்பத்தி பற்றி ஆருடம் சொல்லியே அசத்திக் கொண்டிருக்கும் இணை அமைச்சர் நாராயணசாமி பக்கம் தான் பலரது சந்தேக பார்வை திரும்பி இருக்கிறது.


இவருக்கு ஏன் இவ்வளவு அக்கறை? நாட்டில் உழல் நடந்தால் பொறுத்து கொள்ள முடியாத அளவிற்கு ரொம்ப நல்லவரா?

அதான் இல்லை. இப்படி ஏதாவது செய்தால்..அன்னை சோனியா காந்தியிடம் நல்ல பெயர் வாங்கலாம் என்ற எண்ணம்தான் காரணம்.

ஏனுங்க..  நல்லா கிடைசுதுங்க்களா? நல்ல பெயர்.

ரெய்டுக்கு காரணமான காருடன் உதயநிதி 






Post a Comment