ads

Monday 4 February 2013

ஒரு குடும்பத்தில் இறந்தவர் அதே குடும்பத்தில் பிறப்பாரா?



பிறப்பு இறப்பு இரண்டும் மனித வாழ்க்கையில் மாற்ற முடியாத விதி. இறந்த மனிதன் மீண்டும் பிறப்பானா?

அதற்கெல்லாம் ஆதாரம் இல்லை என்கிறது விஞ்ஞானம்.  விஞ்ஞானத்தின் கடைசி எல்லையில் ஆரம்பமாகும் மெய்ஞானம் உண்டு என்கிறது. கிட்டத்தட்ட எல்லா மதங்களுமே மறுபிறவி கொள்கையை மறுப்பதில்லை. 

நம் ஹிந்து மதத்தின் அடிப்படை தத்துவமே மறுபிறப்பு என்பதுதான். பாவம் புண்ணியம் என்பது அதன் அசைக்க முடியாத விதி. 

மரணம் என்பது முடிவல்ல... அடுத்த அத்தியாயத்தின் ஆரம்பம் என்பது அசைக்க முடியாத வாதம். 

உடல் மாறுகிறது உயிர் என்பது அதன் விளக்கம். நீ வாழும் காலத்தில் என்ன செய்கிறாயோ, அதை அடிப்படையாக கொண்டு உன் அடுத்த பிறவி நிகழும் என்பது தர்ம சாஸ்த்திர விதி. 

இன்று தெரிந்தே பாவம் செய்கிறவர்கள் இருக்கிறார்கள். ஒரு அரசு அதிகாரி தான் செய்யும் பணிக்கு கையூட்டு பெற்றால், அதனால் ஒன்றும் குடி மூழ்கி போய் விடாது என்று நினைக்கிறார் என்று நினைக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இது சட்டப்படி குற்றமா என்பதை விட, தர்மப்படி நியாயமா என்ற கேள்வி எழும். 

தவறுதான். தான் செய்து கொடுத்த காரியத்தால் பலன் பெற்றவர், சிறு தொகையை எனக்கு தருகிறார். இதில் என்ன தவறு இருக்கிறது என்று வாதிடலாம். ஆனால் தர்ம சாஸ்திரம் அதை அங்கிகரிக்கவில்லை. 

ஒருவன் ஒரு பெண்ணை விரும்புகிறான். அவளும் அவனுடன் பழகுகிறாள். அவன் எல்லை மீறுகிறான். அட... நமக்கு கணவனாக வரப்போகிறவன் தானே என்று அவளும் உடன்படுகிறாள். 

ஆண்கள் காதல் ஆடையை அவிழ்க்கும் வரை, பெண்கள் காதல் பேரன்ஸ் அழும் வரை என்று சொல்கிற மாதிரி, தன் இச்சை தீர்ந்து போனதும், அவளை கைகழுவி விட்டுவிட்டு வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டால், பெண் பாவம் அவனை பீடித்துக் கொள்கிறது. 

ஒருவேளை அந்த பெண் வெளியுலகத்திற்கு சொல்லாமல், தான் மோசம் போன விஷயத்தை கூட மறைத்து விடலாம். அந்த பெண்ணிற்கு செய்த பாவத்திற்கு, துரோகத்திற்கான தண்டனையை அவன் அனுபவித்தே தீர வேண்டும். 


அது எப்போ என்பது தான் கேள்வி? அது இந்த பிறவியிலா மறு பிறவியிலா என்பதுதான் மாறும். 

சிலர் சொல்ல முடியாத வேதனையில் தவிப்பார்கள். எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குன்னு புலம்புவார்கள். நான் நல்லதுதானே செய்றேன். நல்லவனா இருந்தும் நல்ல பெயர் இல்லையே...என்றெல்லாம் அடுத்தவர்களிடம் சொல்லி அங்கலாய்த்துக் கொள்வார்கள். 

இதற்கு என்ன காரணம்? அதுதான் அவன் பூர்வ புண்ணியம் என்கிறது ஹிந்து தர்மம்.அரசன் அன்று கொள்வான், தெய்வம் நின்றுகொல்லும் என்பது போல், முன் செய்த பாவத்திற்கு பின்னால் அறுவடை செய்கிற பலன்கள்தான் தடமாற்றம், தடுமாற்றம். 

குரு மாறுகிறார் நல்லது நடக்கும், சனி மாறினால் சரித்திரம் மாறும் என்றெல்லாம் ஜோதிடர்கள் யோக பலன்களை அள்ளி வீசினாலும் ஒன்றுமே நடக்காமல் போகிறது.

இருக்கட்டும்.

சில குடும்பங்களில் அன்பானவர்களின் இறப்பு நிகழும். அது அப்பாவோ, அம்மாவோ, உடன் பிறந்த சகோதரன் அல்லது சகோதரியாக கூட இருக்கலாம்.

பல வருடங்கள் உடன் இருந்தவர்கள் இல்லை என்று ஆகும் போது, ஏற்ப்படும் வெற்றிடம், சூன்னியம் தாள முடியாத துயரத்தில் தள்ளிவிடும்.

அந்த நேரத்தில் பால் வார்த்த மாதிரி அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் யாராவது கர்ப்பம் தரிப்பார்கள்.

உடனே ...பார்த்தாயா? செத்துப் போன என் தம்பி கருவிலே வந்துட்டான் என்பார்கள். பிள்ளைகள் பிறந்து வளரும் போது கூட,  செத்துப் போன என் தம்பியை அப்படியே உரிச்சு வச்ச மாதிரி வந்து பிறந்திருக்கிறான் என்பார்கள்.

அந்த பிள்ளைகள் செய்யும் சேட்டைகள், விளையாட்டுத்தனங்கள், பேசும் முறைகள், பார்க்கும் பார்வையை வைத்து செத்துப் போன என் தம்பி தான் என்று கற்பூரம்  ஏற்றி சத்தியம் செய்யாத குறையாக சாதிப்பார்கள்.

இருக்கட்டும்.

இது அவர்கள் நம்பிக்கை. இதில் யாரும் குற்றம் காண முடியாது. அதனால் யாருக்கும் எந்த நஷ்டமும் இல்லை. ஆனால் அதற்கு சாத்தியமுண்டா என்பது தான் நம் கேள்வி.

இது வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் சொல்லப்படும் வார்த்தையே தவிர, சாத்திய கூறுகள் இல்லை என்பதுதான் பதில்.

பிறப்பையும் இறப்பையும் தீர்மானிப்பது இறைவன். அது நம் கையில் இல்லை. மறு பிறவி என்பது மீண்டும் மனிதனாக பிறப்போம் என்று சொல்ல முடியாது. அதுவும் குறிப்பிட்ட குடும்பத்தில் பிறப்போம் என்பதற்கும் உத்திரவாதமில்லை.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...