Follow by Email

Monday, 4 February 2013

சினிமா உலகிற்கு ஒரு எச்சரிக்கை !!


விஸ்வருபத்திற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு. 

கடலுக்கு கிருஸ்துவர்கள் எதிர்ப்பு.  

இப்படி எல்லா மதக்காரர்களும் எதிர்ப்பு தெரிவிக்கும் போது பெரும்பான்மையான ஹிந்துக்களுக்கு மட்டும் அந்த வாய்ப்பு இல்லையா.. இது என்ன கொடுமை.  இது நியாயமா? அடுக்குமா? தர்மமா? நீதியா? 

இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும். இனிமேல் எந்த படம் எடுத்தாலும் அதில் வரும் ஹீரோ, ஹீரோயின்,வில்லன், காமடியன்,துணை பாத்திரங்கள் என்று யாராக இருந்தாலும், குப்பன், சுப்பன், ராமசாமி, குப்புசாமி, ராமன், கந்தன் இப்படி எந்த ஹிந்து பேர் கொண்ட கதாபாத்திரங்களாக இருந்தாலும் சரி, குடிகாரனாகவோ, மொள்ளமாரியாகவோ, முடிச்சவுக்கியாகவோ, காட்டக்கூடாது.  

அருவாளை தூக்கிகொண்டு திரிகிற ரவுடிகள் , பெண்ணை பாலாத்காரம்  செய்கிற கேடிகள், கள்ளகடத்தல் செய்யும் பாவிகள், போலி அரசியல் வாதிகள், பொறம்போக்கு நிலத்தை வளைக்கும் சாவு கிராக்கிகள், போன்ற எந்த கதாபாத்திரமும் இனி ஹிந்து பெயரில் படத்தில் இடம் பெறக்கூடாது. 

இனி வரும் திரைப்படங்களில் எல்லாம் வரும் கதாபாத்திரங்கள் தெய்வ குணம் படைத்தவர்களாக, இல்லாதவர்களுக்கு ஓடி வந்து உதவும் உத்தமர்களாக மட்டுமே காட்ட வேண்டும்.

மீறி கொலைகாரர்களாக , கொள்ளைகாரர்களாக காட்டினால் பெரும்பான்மை ஹிந்துக்களை அவமான படுத்திய செயல்.

இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் பல முறை செத்தாலும் பரவாயில்லை.  என்ன விலை கொடுத்தாவது தடுப்போம்.

படத்தை சந்திரமண்டலத்தில் திரையிட முயன்றாலும் தடுப்போம். அது எந்த கொம்பனாக இருந்தாலும் விடமாட்டோம்.

இந்த படத்தை தடுத்தால், நான் சூரிய குடும்பத்தை விட்டேவெளியேறி விடுவேன் என்று அழுகுணி ஆட்டம் ஆடினாலும் சரி விடமாட்டோம்.

வேண்டுமானால்... A , B C  என்று உங்கள் கதாபாத்திரங்களுக்கு பெயர் வைத்து கொள்ளலாம்  என்று பெரும்பான்மை ஹிந்துக்கள் சார்ப்பாக, அப்பப்போ யோசிச்சு ஆர்ப்பாட்டம் செய்வோம் கட்சியின் சார்பாக எச்சரிக்கிறோம்.  ஜாக்கிரதை.

Post a Comment