Follow by Email

Wednesday, 30 January 2013

விஸ்வருபம் - மத்திய அரசுகவனம் செலுத்துகிறது.



விஸ்வருபம் படம் சம்மந்த பட்ட அனைத்து முடிவுகளும் கோர்ட்டின் கையில் இருப்பதால், என் கருத்தை இப்போது சொல்லவில்லை. வழக்கு முடியட்டும். இதை பற்றி விரிவாகவே பேசுவோம்.

இப்போது இப்பிரச்சனை தொடர்பாக , மத்திய உள்துறை அமைச்சர் சுசில் குமார் ஷின்டே, வெளிப்படையாகவே இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

நமக்கு  ஒரு அரசியல் சட்டம் உள்ளது. இது ஒரு சுதந்திர நாடு. பரிபூரண கருத்துச் சுதந்திரம் உள்ளது. விஸ்வரூபம் படம் மாநில அரசால் தடை செய்யப்பட்டது குறித்து, மத்திய அரசு அதிருப்தி அடைந்துள்ளது என்றார்.

அவர்  மேலும் தெரிவிக்கையில், சில மாநில அரசுகளிடம்  இதுபோன்ற பிரச்னைகள் உள்ளன. 

இவை தொடர்பாக நாம் கவனம் செலுத்த தொடங்கியுள்ளோம். குறிப்பிட்ட இந்த திரைப்பட தடை விஷயத்தில் என்ன நடக்கிறது என்பதை விசாரித்து வருகிறோம். சில தகவல்களை சேகரித்துள்ளோம்  என்றார்.

அனேகமாக இது தொடர்பாக கவர்னரிடம் விளக்கம் கேட்கலாம் என்றே தெரிகிறது. 
Post a Comment