Follow by Email

Monday, 28 January 2013

படத்தை தடை செய்யும் உரிமை தமிழக அரசுக்கு இல்லை.



உலக நாயகன் கமல்ஹாசன் கைவண்ணத்தில் பெரும் பொருட்செலவில் உருவாகி இருக்கும் விஸ்வருபம் படத்திற்கு தமிழக அரசாங்கம் இரண்டு வார கால தடை விதித்துள்ளது. 

ஆனால் விஸ்வருபம் படத்தை தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. 

டில்லியில் இது தொடர்பாக மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் மனீஷ் திவாரி செய்தியாளர்களிடம் கூறியதாவது. 

படங்களை வெளியிட அனுமதி அளிப்பது தொடர்பான விஷயத்தில் தணிக்கை குழுவின் கருத்து மற்ற அனைத்தையும் கட்டுப்படுத்தும் என உச்ச நீதிமன்றம் ஏற்கனவே இயக்குனர் பிரகாஷ் ஜா வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. 

ஒரு படத்தை தடை செய்வது என்பது மாநில அரசின் அதிகார வரம்பில் வரவில்லை. குறிப்பாக தணிக்கை குழு அனுமதி அளித்த பிறகு ஒரு படத்தை தடை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை.

அரசியல் சாசன சட்டத்தின் பிரிவு 246, ஏழாவது அட்டவணை பட்டியல் ஓன்று பதிவு 1, சினிமா படங்களை திரை இடுவதற்கு சான்றிதழ் அளிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்கி உள்ளது.

எனவே ஒருமுறை மத்திய தணிக்கை குழு படத்தை திரையிட அனுமதி அளித்த பிறகு பிற அனைத்தையும் அது கட்டுப்படுத்தும்.

திரைப்பட காட்சி சட்டத்தின் அனைத்து வழிவகைகளையும் உச்ச நீநிதிமன்றம் ஆராய்ந்தது. இந்த ( தணிக்கை குழுவின் ) அதிகாரத்தை அரசியல் சாசன சட்டம் மாநில அரசுகளுக்கு வழங்கி உள்ள சட்டம் ஒழுங்கு அதிகாரத்திற்கு எதிர் நிலையில் வைத்துள்ளது.

எனவே தமிழக அரசு  பிரகாஷ் ஜா வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அளித்துள்ள தீர்ப்பை மிக கவனமாக ஆராய வேண்டும்.

ஏனனில் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்புக்கு எதிராக அது மோதுகிற வகையில் அமைந்து விடக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: மக்கள் ஓசை, மலேசியா

Post a Comment