Follow by Email

Thursday, 10 January 2013

அரபு சேக்குகளுக்கு வாடகை மனைவியாகும் இந்திய பெண்கள்.


சேக்குக்களின் சோக்குகளை பற்றி ஓரளவு அனைவரும் தெரிந்தே வைத்திருப்பார்கள். 

உல்லாச பேர்வழிகள். எண்ணை வளத்தால் செல்வம் கொழிக்கும் இவர்கள் கண்ணை மறைப்பது காமம்.  

தங்கள் பகுதி நேர பசிக்கு இரையாகும் பெண்களுக்கு பணத்தை காட்டி மறைத்து விடுவதில் கைதேர்ந்தவர்கள்.

இவர்கள் கைவரிசை இப்போது இந்தியாவில் காட்டப்படுகிறது என்பது தான், அதிர்ச்சியான செய்தி.

இது தொடர்பான செய்தி ஒன்றை இணையதளத்தில் படித்தேன். உடன் utub விடியோ இரண்டையும் இணைத்திருக்கிறார்கள். அந்த விபரங்கள் இதுதான்.

இந்தியா வரும் அரபு சேக்குகள் மும்பை மற்றும் டெல்லியில் கால் பதித்ததும் தங்கள் வலை வீசலை ஆரம்பித்து விடுகின்றனர்.

அரபு சேக்குகள்  வந்திருக்கிறார்கள் என்றாலே இதற்கென்றே அலையும் புரோக்கர்கள் களத்தில் இறங்கி விடுகிறார்கள்.

ஒப்பந்தம் பேசப்படுகிறது. எத்தனை நாள்  இந்தியாவில்  தங்கபோகிறார்கள்  எந்த வயது பெண் தேவை என்பதை பொருத்தது ரேட்  மாறும்.

இந்த பேரம் முடிந்த பிறகு இதற்கென்றே உள்ள மத குருமார்கள் அழைக்க படுகிறார்கள்.

எதற்கு?

நிக்கா (கல்யாணம்) செய்யத்தான்.

என்னே ஒரு பெரும்தன்மை.

அவர்கள் முறைப்படி திருமணமானதும் அவர்கள் செல்லும் இடங்களுக்கு கூடவே மனைவியான அந்த பெண்ணும் பயணிக்கிறாள்.

சேக்குகள் இந்தியாவில் தங்கி இருக்கும் காலம் வரையில் அந்த பெண்ணும் முழு மனைவியாக நடந்து கொள்கிறாள்.

இதற்கென பெரும்  தொகை கை மாறுகிறது.

தங்கள் விசா காலம் முடிவடைந்ததும், மீண்டும் அந்த பெண் மதகுருமார் முன் நிறுத்தப்படுகிறாள்.

எதற்கு?

தலாக் செய்யத்தான். ( விவாகரத்து )  இந்த சடங்குகளும் சில நிமிடங்களில் முடிந்து விடுகிறது.  பின் தனியாளாக தங்கள் நாட்டுக்கு திரும்பி போகிறார்கள்.

இந்த செய்திகளில் எத்தனை சதவிகிதம் உண்மைத்தன்மை இருக்கிறது என்று எனக்கு தெரியாது.

ஆனால் இது உண்மையாக  இருக்குமானால், உடன் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அந்தந்த அரசாங்கத்தின் கடமை.

செய்தி வெளியான இணையதள முகவரியும்... அதில் இணைக்கப் பட்டிருக்கும் விடியோக்களையும் அதில் காணலாம். 
Post a Comment