Follow by Email

Sunday, 9 December 2012

நிலா முகத்தை



புதிது புதிதாக எழுதச்
சொல்கிறார்கள்
உன் பழைய
ஞாபகங்களைத் தான்
கிளற வேண்டும்

ஒரு தைரியசாலி
அச்சம் அடைவது
உன்னைப் போன்ற
கோழையிடம் தான்

நீ அளித்த
அன்பளிப்புகளிலேயே
அற்புதமான
அன்பளிப்பு இந்த
வேதனைதான்

உன் புருவங்கள் என்பது
கோடிட்ட இடம்
அதை என் கவிதைகளால் நிரப்பட்டுமா

இருட்டுக் கூந்தலை பகலில் காட்டுகிறாய்
நிலா முகத்தை
இரவில் பூட்டுகிறாய்
புரியவில்லை உன்
வானியல்

பா. விஜய்
Post a Comment