ads

Wednesday 14 November 2012

துப்பாக்கி சினிமா விமர்சனம்



ராணுவத்தில் கேப்டனாய் இருக்கும் விஜய் 40 நாள் லீவில் வீட்டுக்கு வருகிறார். 

ரயிலில் வந்தவரை அப்படியே மடக்கி பொண்ணு பார்க்க கூட்டிப் போகிறது அவரது குடும்பம்.

வீட்டுக்கு போய் நல்லா ரெஸ்ட் எடுத்துட்டு, குட்டி தூக்கம் போட்டு பிரஸா போகலாமே என்று விஜய் சொல்ல, உனக்கு வயசாகிகிட்டே போகுதுடா என்று அம்மா பதிலுக்கு சொல்ல, ஒரு நாள்ல என்னம்மா வயசாகிடும் என்று திருப்பி கேட்க, வழக்கமான ஜாலி விஜய் படம் என்ற எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது.


காஜல் அகர்வாலை பெண் பார்க்கும் படலம். அட...இது கல்யாணத்திற்கு பின் நடக்கும் கதை போல என்று யோசிப்பதற்குள், விஜய் இவர் பிடிக்கலை என காரணங்கள் சொல்வதும் பின் அந்த காரணங்களே ஒவ்வொன்றாய் காலியாக விஜய் ஜொள்ளு விட்டு அவர் பின்னால் போவதும், அவர் பிடிக்கலை என்பதும் கலகல காதல்.

செம ஜாலி கதை போலிருக்கு நினைத்தால், பஸ்ஸில் குண்டு வெடிக்கிறது. குண்டு வைத்தவனை துரத்தி பிடித்து போலீசில் ஒப்படைக்க,  போலிஸ் பிடியில் இருந்து தீவிரவாதி தப்பிக்க படம் சூடு பிடிக்கிறது.

படம் முழுவதுமே ஜாலி திகில் என்று இரண்டு பாதைகளில் பயணம் செய்கிறது. காஜல்அகர்வால் மற்றும் ஜெயராம் வரும் காட்சிகள் கலகல என்று போகிறது. பின் தீவிரவாதிகள்   திட்டம், அதை முறியடிக்க விஜய் எடுக்கும் முயற்சிகள் ஆக்சன் திர்லராக மாறுகிறது.

முருகதாஸ் செய்த திர்லர் படம் என்றதும் ரமணா மாதிரி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், விஜய் ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.


திரைக்கதைக்குள் இருக்கும் ஓட்டைகளை தேடாமல் ஒரு முறை தியேட்டரில் பார்க்க வேண்டிய படம்.

விஜய் ரசிகர்ளுக்கு விருந்து.


1 comment:

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...