ads

Friday 21 September 2012

சனி பகவானை எப்படி வணங்க வேண்டும்?



வண்ணத்தில் நீலத்திற்கு சொந்தக்காரர், கருப்பை ஆள்பவர், உழைப்பை அதிகமாக்கி ஊதியத்தை குறைத்து கொடுப்பவர், பாடுபட்டு உழைக்க வைத்து பலனை பாதியாக்கி தருபவர், சூரிய புத்திரன், கர்மவினை கிரகம் என்றெல்லாம் வர்ணிக்க படுபவர் சனிபகவான்.

இவரை தர்மத்தின் தலைவன் என்கிறது புராணங்கள். எளிவன் வலியவன் பார்ப்பதில்லை.

ஏழை பணக்காரன் கணக்கில்லை, யாராக இருந்தாலும் வாங்கி வந்த வரத்திற்கு தகுந்த மாதிரி பலன்களை தருவார். அதனால்தான் கர்மவினை கிரகம் என்கிறது சாஸ்த்திரங்கள்.



இவர் சாமானிய மனிதர்களை மட்டும் அல்ல, மகத்தான சக்தி பெற்றவர்களை கூட விட்டு வைத்ததில்லை,.


மகுடம் சுமக்க வேண்டிய ராமன் மரவுரி தரித்து கானகம் சென்றான்.

காரணம் என்ன?

குரு திசையில் பிறந்த ராமன் சனிதிசையை சந்தித்த போதுதான். நாடாளும் பாக்கியம் இழந்து காடாள வேண்டிய கட்டாயம், வலிமையான எதிரியோடு மோதவேண்டிய நிர்பந்தம், அன்புக்கு உரிய மனைவியின் பிரிவு, அவ்வளவு ஏன்... கர்ம வினைகூட தேடி வந்தது. அதனால் பாசத்துக்கு உரிய தந்தையின் பிரிவையும் சந்திக்க வைத்தது.



நல்லவர்களாய் வர்ணிக்கப்பட்ட பாண்டவர்கள் கூட, நயவஞ்சக துரியோதனனால்   நாடிழந்து, நகரிழந்து, உரிமைகளை இழந்து காட்டில் திரிந்த காரணமும் சனிதிசைதான்.


நளன் சூதாடி தோற்றது சனிதிசைதான். உண்மையின் உரைகல்லாய் இருந்த அரிச்சந்திரன் எல்லாம் இழந்து, மனைவி மக்களை பிரிந்து சுடுகாட்டில் அலைந்ததற்கு காரணமும் சனிதிசைதான்.


பொதுவாக சனிதிசை என்றில்லை, ஏழரை சனி, அஷ்டமசனி, அர்த்தாஷ்டம  சனி, கண்டக சனி நேற்று பல்வேறு பெயர்களில் வந்து படுத்தி எடுப்பார். அதோடு இவர் பார்வையும் பயங்கரமானது.

அதனால்தான் அவர் கண்கள் கட்டப்பட்டே இருக்கும். கண்கள் திறந்தால் என்ன நடக்கும் ஒரு உதாரணத்தை பார்ப்போமா?

ராவணன்.  சிவபெருமானுக்கு இணையாக, சனிக்கு அடுத்தபடியாக ஈஸ்வர பட்டம் பெற்றவன். தன் தவவலிமையால் சர்வலோகத்தையும் ஆட்டி படைத்தான்.


சிலசமயம் சிவபெருமானையே சீண்டி பார்த்ததும்  உண்டு. ஆனால் அவன் கஷ்டகாலம் சனி வடிவில் வந்தது.

ராவணன் சபையில் ஒருநாள் நவகிரங்களை பற்றிய பேச்சு வந்தது. உங்களை பார்த்து அனைவரும் அச்சம் கொள்கிறார்கள். ஆனால் கேவலம் இந்த நவகிரகங்கள், உங்கள் அருமை பெருமையை உணராமல், தங்கள் தொழிலிலேயே கவனமாய் இருக்கிறார்கள்.


அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். அவர்களை செயல்படமுடியாமல் கட்டிப்போட்டால் என்ன? கேள்வி திட்டமானது, திட்டம் செயல்பாட்டிற்கு வர உத்தரவு பிறபித்தான் ராவணன்.

இழுத்து வாருங்கள் நவகிரங்களை. அவ்வளவுதான் ... அரக்கர் சேனை அம்பாய் பாய்ந்தது. சற்று நேரத்தில் மற்றவர் விதிப்பயனை தீர்மானித்து பலன் தந்து கொண்டிருந்த கிரக கூட்டம் கட்டி இழுத்து வரப்பட்டது.

அதுசரி....கிரங்களின் போதாத காலம் குண்டுகட்டாக தூக்கிவரப்பட்டு ராவணன் அரியணை ஏறும் படிகளில், படிக்கு ஒருவராய் குப்பற கிடத்தபட்டார்கள். அவர்களை மிதித்து ஏறித்தான் அரியாசனத்தில் அமர்வது ராவணன் வழக்கமானது.

எதற்கும் ஒரு முடிவு உண்டு. சர்வவல்லமை பெற்ற கிரகங்களே அடிமைப்பட்டு போகிறது என்றால் அடுத்து  ஒரு எதிர்வினை இருக்கத்தானே செய்யும்.

அதற்கு அடித்தளம் அமைக்க நாரதர் வந்தார். வழக்கம் போல் ஆமாம் சாமி கூட்டத்தோடு அமர்ந்திருந்தான் ராவணன்.

என்ன ராவணா... உன் அரியணை படிகளில் ஏதோ கிடக்கிறதே என்ன?

ஒன்றும் அறியாதவர் போல் கேட்டார் நாரதர்.

அது நவகிரங்கள்.

அவர்களை ஏன் குப்பற படுக்க வைத்திருக்கிறாய். திருப்பி போடு.அதிலும் இந்த சனி இருக்கானே திமிர் பிடித்த ஆள். அவனை உன் காலால் மிதித்து ஏறு.. அப்போதுதான் அவன் கொட்டம் அடங்கும்.

நாரதர் சாமார்த்தியமாக காய்களை நகர்த்தினார். ராவணன் கெட்டகாலம் உடனே வேலை செய்தது. தன் காவலாளியை கூப்பிட்டு சனியை திருப்பி போடச்சொண்ணன்.

போட்டார்கள்...!

சனி பார்வை பட பட.. அவன் பலம் குறைந்தது. கடைசியில் அவன் அழிய காரணமாய் இருந்தது சனி பார்வையே.

கோவியில் சனி பகவானை வணங்கும் போது மற்ற தெய்வங்களை வணங்குவது போல் நேருக்கு நேர் நின்று வணங்ககூடாது. ஓரமாய் நின்றுதான் வணங்க வேண்டும்.

இது திருநள்ளாறு சனிபகவானுக்கு பொருந்தாது. காரணம் அங்கே இருப்பது அனுக்கிரக மூர்த்தி. அதனால் அவரை  நேருக்கு நேர் நின்று வணங்கலாம் தவறில்லை.

3 comments:

  1. நன்றாக எழுதியிருக்கீங்க. நாரதர் நகர்த்தியது காய்களை, கைகளை அல்ல, \\அவரி நேருக்கு நேர்\\ அவரை நேருக்கு நேர். பின்னூட்டப் பெட்டியில் உள்ள நீக்கவும், பலர் இதனாலேயே பின்னூட்டமிடத் தயங்குவார்கள்.

    ReplyDelete
  2. பின்னூட்டப் பெட்டியில் உள்ள Visual word verification- நீக்கவும், பலர் இதனாலேயே பின்னூட்டமிடத் தயங்குவார்கள்.

    ReplyDelete
  3. வணக்கம் jayadev சார். நீங்க சொன்ன மாதிரி நீக்கி விட்டேன். உங்கள் போன் நம்பர் என்ன. எனக்கு மெயில் செய்யுங்க. உங்க கூட கொஞ்சம் பேசணும்.

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...