ads

Friday 11 May 2012

A few minutes to think

வருடத்திற்கு ஒரு முறை வந்து போக பிறந்த நாள் இல்லை. வாழ்க்கையில் ஒரு முறை மட்டுமே வரக்கூடிய நிகழ்வுகளில் இதுவும் ஓன்று. 
என்னதான்  விஞ்ஞானம் வளர்ந்து வியத்தகு சாதனை புரிந்தாலும், மெய்ஞானம் சுட்டி காட்டும் விதி வசத்தில் இருந்து விடு பட முடியாது.  
அது மரணம். 
எந்தனை தேடி  வைத்திருந்தால் என்ன? 
எத்தனை  கோடி குவித்து வைத்திருந்தால் என்ன? 
அத்தனை  கோடி உயரினத்திற்கும் மரணம் என்பது மாற்றத்திற்கு உரியது அல்ல. 
உயிர்கள் தோன்ற ஆரம்பித்த காலம் தொட்டே கால வெள்ளத்தில் கரைந்து போனவர்கள் கணக்கில் அடங்காது. மரணம் என்பது வெறும் சுவாசம் சம்மந்தப்பட்ட நிகழ்வு அல்ல. 
ஒரு சகாப்தத்தின் முடிவு. 
சாதாரண மனிதனாக இருந்தாலும் கூட சகாப்த்தம் என்ற சொல்லுக்கு இணையாக சரியாசனம் தருவேன். காரணம் ஒவ்வொரு உயிரும் இன்னொரு உயிரை இனவிருத்தி செய்கிறது. 
நீங்கள்  சிந்திக்கலாம்.பெற்று போடும் கலையை விலங்குகள் கூட கற்று வைத்திருக்கிறது. இதில் மனிதனுக்கு மட்டும் என்ன தனிப்பட்ட மரியாதை. 
ஆனால் உண்மை நிலவரம் வேறு. வரலாற்று பக்கங்களை பாருங்கள். எத்தனை பெயர்கள் அதில் இடம் பெற்றுக்கிறது. அத்தனை பேருக்கும் அதில் இடம் இல்லாமல் போனதற்கு காரணம் என்ன? 
அது சாதனை.
தான் வாழும் காலத்திலேயே வரலாற்று தகுதியாடு வாழ்பவர்கள்  இருகிறார்கள். 
அவர்கள் செய்யும் செயல்கள். ஆற்றும் கடமைகள், அடுத்த தலைமுறைக்கும் சேர்த்து நன்மைகள் இருக்கும். அப்படி பட்டவர்களை மட்டும்தான் அடையாளம் கட்டுகிறது காட்டுகிறது வரலாறு. 
ஏனையோர் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, செத்தவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுகிறார்கள். 
அது   ஒரு  வகையில் சரிதான் என்றாலும் சாம்மானிய மனிதர்களுக்கும் கூட சம அந்தஸ்து தர வேண்டும் என்பது என் அபிப்பிராயம். 
ஒரு காந்தி உருவாக அவர் தந்தை மட்டும் காரணம் இல்லை. 
தந்தையின்  தந்தை, அவரின் தந்தை என்று பட்டியலை பின்னோக்கி போட்டால், ஆயிரம் தலைமுறையாவது அதற்காக உழைத்திருக்கும். 
ஒரு சாமானிய மனிதன் சராசரி மகனை பெற்று விட்டு போகலாம். அந்த சராசரி மகன் ஒரு சாதனையாளனை பெற்று தரலாம். யாருக்கு  தெரியும். 
அதனால்தான் சொல்கிறேன்.  மரணம் என்பது ஒரு சகாபதத்தின் முடிவு. 
இந்த மானுடம் என்பது மகத்தானது மறுக்க வில்லை. ஆனால் சிலரின் போக்கு என்னை சிந்திக்க வைக்கிறது.  
கோடிகளை தேடி அலையும் கூட்டம், அதற்காக மனித நேயத்தை மறந்து விட்ட அவலம், கொலையில் முடியும் கொள்ளை, கையில் கிடைத்தால் போதும் திருட்டு, நம்பினால் செய்யும் மோசடி என்று பட்டியல் நீள்கிறது. 
யோசித்து பாருங்கள். வாழ்க்கை என்பது என்ன? 
தூங்கி பார் தெரியும். 
என் வீடு, என் சொத்து, என் வீடு, என் மனைவி, என் மக்கள் என்று வாய் கிழிய பட்டா பொடுகிறமே, தூங்கும் போது துணை நிற்பது எது? 
ஓன்று சொல்லவா.... உறக்கம் என்பது சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் சாவின் ஒத்திகை. 
விழித்தால்,....
உயிர் பிழைத்தால்,.... 
சொந்தம் வரும், சொத்து வரும், மனைவியும் மக்களும் வருவார்கள். 
இதுதான் வாழ்க்கை, 
இதுதான் நிஜம்.
 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...