ads

Wednesday 30 May 2012

நேரம் நல்ல நேரம்


கோவபடாமல் ஒரு உண்மையை நாமெல்லாம் ஒப்பு கொள்ள வேண்டும். நேரத்தை நமக்கு சரிவர செலவழிக்க தெரிவதில்லை. 

நான் ரொம்ப விவரமானவன் என்று பெருமையடித்து கொள்கிறவர்கள் கூட, இந்த விஷயத்தில் அநேகமாய் பெயில் மார்க்குதான் எடுக்கிறார்கள்.

நேரம் என்பது ஒரு அபூர்வமான பொருள். அதை பலரும் கண்ணெதிரே வீணாக கரைக்கிறார்கள், சிலர் அலச்சிய படுத்துகிறார்கள். நேரத்தை அழுகும் பொருள் என்று வர்ணித்தான் ஒரு மேலை நாட்டு அறிஞன். 

நம்மவர்களுக்கு நேர உணர்வு போதாது. (மீண்டும் உங்களை வம்புக்கு இழுக்குறேனா? )நேரத்தின் அருமை நமக்கு தெரிய வேண்டுமானால் வாழ்க்கையில் சிலரை சந்திக்க வேண்டும்.

ஒரு ஆண்டின் அருமையை உணர வேண்டுமானால் 5 மதிப்பெண்கள் குறைவாக பெற்றதால் தேர்வில் தொல்விஉற்ற மாணவனை சந்திக்க வேண்டும். 

அவன் கத்துவான், கதறுவான், ஒரு சிறு கவன குறைவால் மீண்டும் படித்த பாடங்களையே படிப்பது எவ்வளவு பெரிய போர்.

ஒரு மாதத்தின் அருமையை உணர வேண்டுமானால் குறைபிரசவமாக குழைந்தை பெற்ற தாய்மார்களை கேட்க வேண்டும். 

குறைபிரசவ குழந்தையை காப்பாற்றுவதில் தான் எவ்வளவு இடர்பாடுகள். ஓரிரு மாதங்கள் தள்ளி பிறந்திருந்தால் எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும். 

ஒரு வாரத்தின் அருமையை உணரவேண்டுமானால் வார பத்திரிக்கையின்  ஆசிரியர்களை கேட்க வேண்டும்.

ஒரு நாளின் அருமையை உணர வேண்டுமானால் தினக்கூளிகள், அன்றாடங் காச்சிகள், சாலை ஓர நடைபாதை கடைகாரர்கள்,  தள்ளுவண்டி காரர்களை கேட்க வேண்டும். பந்த் என்ற பெயரால் தேவையிலாமல் கதவை இழுத்து மூடுகிற வியாதி இங்கே மிக அதிகம்.

ஒரு மணி நேரத்தின் அருமையை உணர வேண்டுமா...மருத்துவரை கேளுங்கள்.இவர்கள் சொல்வார்கள். சற்று முன்பாக அழைத்து வந்திருந்தால் இந்த உயிரை காப்பாற்றி இருப்பேன் என்று. 

பத்து நிமிடத்தின் அருமையை காதலிக்கிறார்கள் அல்லவா.. அவர்களை கேட்க வேண்டும். 

இவள் பஸ்சாண்டில் காத்து கொண்டிருப்பாள்.  இவன் வந்து தொலைய மாட்டான். பார்க்கிறவர்கள் இவளை ஏற இறங்க பார்ப்பார்கள். 

இது ஏன்...பஸ்ல ஏறாம, வீட்டுக்கும் போகாம இங்கேயே நிக்குது என்று யோசிப்பார்கள். அந்த கணங்கள் இவளுக்கு ரணமாக இருக்கும்.

ஒரு நிமிடத்தின் அருமையை உணர ரயிலை கோட்டை விட்டார்கள் அல்லவா..அவர்களை கேளுங்கள். இப்பத்தான் சார் வந்தேன். அதற்குள் ரயில் புறப்பட்டு விட்டது என்பார்கள் பரிதாபமாக. 

ஒரு வினாடியின் அருமையை உணர வேண்டுமானால் சாலையில் விபத்தை சந்தித்தவர்களை கேட்க வேண்டும். 

இப்படி திரும்பி பார்பதற்குள் என்னை அடிச்சு தூக்கிட்டான் என்பார்கள்.சிலர் இதை சொல்வதற்கு கூட இருக்க மாட்டார்கள்.

மில்லி செகன்ட் என்று அளவு உண்டு. பலருக்கு இதை பற்றி தெரியாது. ஆசிய தடகளத்தில் ஜோதிர்மயி தங்கம் வென்றது வினாடி இடைவெளியில் இல்லை, வினாடியில் நூறில் சில பங்குகளில் தான்.

நண்பர்களே நேரம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது புரிந்திருக்கும். இனியும் நேரத்தை வீணடிக்காமல் பயன் படுத்துங்கள். வாழ்க்கையில் உயருங்கள். 

இது நேரம் நல்ல நேரம் என்ற லேனா தமிழ்வாணன் எழுதிய புத்தகத்தில் இருந்து தொகுக்க பட்டது.

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...