Follow by Email

Friday, 9 March 2012

அந்தரங்கம் புனிதமானது.

என் தோழி ஒரு மனோதத்துவ டாக்டர்.  அவளிடம் பேசி கொண்டிருக்கையில் ஒரு சுவையான கதை கிடைத்தது,   அவளே சொல்கிறாள் கேளுங்கள்.


அவள் பெயர் புவனா... அவள் சொன்ன வாசகம் இதுதான்.

நான் அவனோடு வாழ மாட்டேன்.  திரும்ப திரும்ப இதே பல்லவிதான் புவனாவிற்கு. இத்தனைக்கும் திருமணம் ஆகி முப்பது நாள் கூட ஆகவில்லை. மஞ்சள் தாலி ஈரம் கூட காயாத நிலையில்தான் இந்த முடிவுக்கே வந்து விட்டாள்.

ஏன்?

கணவனாக வந்த கண்ணனின் வக்கிர புத்தியே காரணம்.  இதை கண்ணன் வாயாலேயே கேட்போம். 

எனக்கு திர்லிங்க்ன்னா சின்ன வயசுலே இருந்து பிடிக்கும்.  எளிதில் கிடைக்கிற எது மேலேயும் எனக்கு விருப்பம் இல்லை.

என்ன காரணம்?

போராடி ஜெயிக்கணும்  அப்படி பெறுகிற வெற்றியில் தான் ஒரு தில்லே இருக்கு.  நான் சின்ன பிள்ளையா இருக்கும் போது ஒரு வயதான பெரியவர் அடிக்கடி சொல்லுவார்.  

ஆம்பிளைனா ஒரு கம்பீரம் இருக்கணும். போராடனும், அடக்கணும்,ஜெயிக்கணும் இப்படி சொல்லி சொல்லியே எனக்கு வீரத்தை ஊட்டினார். 

எல்லாம் சரி ... புவனா கூட என்ன பிரச்சனை.  அவ ஏன் நீங்க வேண்டவே வேண்டான்னு அடம் பிடிக்கிறா?

எனக்கு அடங்க மாட்டேங்கிறா. 

அடக்க பார்த்திங்களா.

ஆமாம்.

கணவன் மனைவி உறவுங்குறது அன்பு காட்டுறதுதானே.  

நான் அன்பாத்தான் இருக்கேன்.  அவதான் புரிஞ்சுக்க மாட்டேங்கிறா. 

எப்படி?

இதுதான் அதிர்ச்சி இன் உச்சகட்டம்.  எல்லாவற்றில்லும் திர்லிங்கை எதிர்பார்த்த கண்ணன், முதல் இரவிலும் முன்னோட்டம் விட்டது தான் அதிர்ச்சி.

முதல் இரவு என்பது என்ன?  ஒரு ஆணும் பெண்ணும் உணர்வு ரீதியாக, மனோ ரீதியாக, புது கணக்கு துவங்குகிற நாள்.   ஆனால் கண்ணனின் கதையே வேறு.  இங்கேயும் வேகத்தை  காட்டினான். 

புவனா எப்படி?

புது ஆள் என்றாலே வாயை திறக்காதவள்.  காசு தாரேன் பேசுறியான்னு கேட்க வைக்கிற குணம்.  

அவளுக்கு சொல்லி அனுப்பப்பட்ட விஷயம் என்ன? 

பாத்து பதமா நடந்துக்கோ. முதல்ல கால்ல விழுந்து நமஸ்க்காரம் பண்ணிக்கோ. பாலை கொடு.  கையை பிடிச்சா...... வெக்க படாதே. பக்கத்துல உட்காந்த்துகோ. 

பால்  கொடுத்தா குடி.  பழம் கொடுத்தா சாப்பிடு.  தொட்டு பேசினா விட்டு விலகாதே.  அதுக்கு மேல உனக்கே புரியும். 

பயம். பதட்டம். தயக்கம். மயக்கம். என்று ஒரு களேபரமான சூழலில் உள்ளே வந்தவளுக்கு, காலில் விழும் கட்டாயமோ, பழம் சாப்பிடும் சூழ்நிலையோ வரவில்லை.

காரணம்.

வில்லன் நடிப்புக்கு ஒத்திகை பார்க்கிற மாதிரி.  மகாபாரத துச்சாதனனாக மாறி,  ஆடை பற்றி இழுத்து , அலற விட்டு, அழ வைத்து கிட்டத்தட்ட பாம்பிடம் சிக்கிய தேரை மாதிரி கண்ணனின் அகோர பசிக்கு ஆளானாள். 

வெட்கம்,  வேதனை,  வலி, அவமானம் இவற்றால் கூனி குறுகி போனாள் புவனா. 

இத்தனைக்கும் கண்ணன் படித்தவன்.  பட்டதாரி. எதிர்காலத்தை பற்றி ஏகமாய் சிந்திப்பவன். பண்பாளன்.  ஆனால் அந்த்தரங்க விஷயத்தில்  மட்டும்,  ஆள் படு மட்டமாக இருக்கிறான்.

ஓடி பிடித்து விளையாடுவது ஊடல்.  ஆசையும் வெட்கமும் அலைமோதினாலும்,  அதை எல்லாம் அடக்கி கொண்டு புருஷ புழுவுக்கு தெரியாமல்,  கெஞ்ச வைப்பதும், கடைசியில் அடங்கி போவதும்,  ஆட்கொள்வதும் நல்ல தம்பதிக்கு அழகு.

ஆனால் வேட்டையாடுவது போல் கொத்தி குதறி விட்டு போவது கொடுமை.  கண்டிக்க வேண்டிய விஷயம்.

பொதுவாக திருமணம் என்பது என்ன?  ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றினைவதர்க்கான ஒப்பந்த விழா.   அதன் அடுத்த பகுதி தான் கலவி.  இது ஒன்னும் தப்பு இல்லை.

வீடுகள் தோறும் நடக்கிற விஷயம்தான்.  ஆனால் பரஸ்பர ஒத்துழைப்பு, விருப்பம் இவற்றோடு நடக்க வேண்டிய விஷயம்.  ஒருவரின் விருப்பத்தை புறக்கணித்து விட்டு  கட்டாய கலவி என்பது,  அது கணவன் மனைவியாக இருந்தாலும்  அது ரேப்.  

முன்பின் அறிமுகம் இல்லாத பெண்ணை, முதல் முறையாக சந்திக்கும் பொது,  அதுவும் தனிமையில் சந்திக்கும் போது, எப்படி நடந்துக்கணும்.

அவள் விருப்பம், தேவை, கனவு இதை குறைந்த பட்ச்சம் காது கொடுத்தாவது கேட்கணும்.  என் வாழ்க்கையில் நீ இல்லாத பகுதி எதுவும் இல்லை  என்பதை உணர வைக்கணும். 

சுய விருப்பம், மதிப்பு, புரிந்து கொள்ளுதல் இந்த வட்டத்திற்குள் வருவதுதான் கலவி.  அதுவும் பெண்ணின் விருப்பத்திற்கு மதிப்பளிப்பது முதல் கடமை.

தாலி கட்டியாச்சு, லைசன்ஸ் வந்தாச்சு, இனி எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்பது சிறு பிள்ளை தனம்.

இது வீர விளையாட்டல்ல விருப்பங்களை பூர்த்தி செய்தல்.  அடக்கி ஆள எதிரி அல்ல,  வாழ்க்கையில் இணைகோடாக வருகிற ஒரு துணை. 

உண்மையில் அந்தரங்கம் புனிதமானது.  கோவில் மாதிரிதான் அது.

கண்ணன் இப்போது சிகிச்சை பிரிவில் இருக்கிறான்.  நிச்சயம் மாற்றம் வரும்.
Post a Comment