ads

Saturday 25 February 2012

சனிஸ்வரனும் சர்வேஸ்வரனும். SANI VS SIVAN

சனி...

தர்மத்தின் தவ புதல்வன்.  தர்ம தேவதை இவர் வடிவம். இவருக்கு ஏழை பணக்காரன் பேதமில்லை.  உயர்ந்தவன் தாழ்ந்தவன் பாகுபாட்டில்லை.  அனைவருக்கும் ஒரே நீதி என்ற கொள்கை உடையவர்.

இவரை பொறுத்தவரை மனிதரும் கடவுளும் ஒன்றே.  
 கைலாயத்தில் ஒரு நாள் காட்சி அளித்தார் சனிபகவான்.  சங்கரனை வணக்கினார்.

மங்களம் உண்டாகட்டும்.  என்ன சனிச்வரா... வராத நீ வந்திருக்கிறாய்? வந்ததின் நோக்கம் என்ன?

பிரபு... மேலோர் கிழோர் என்றில்லாமல் அனைத்து லோகத்திருக்கும் பொதுவானவன் நான். 

அதிலென்ன சந்தேகம் உனக்கு?

கருணை கடலே....தற்போதைய கால சூழலில்,  தங்களை சனிச்வரனாகிய நான் பீடிக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. நீங்கள் அனுமதி கொடுத்தால் மூன்றே மாதத்தில் தங்களிடம் இருந்து விலகி விடுவேன்.

என்ன...என்னையும் பீடிக்க போகிறாயா?

ஆம் பிரபு.

சர்வ வல்லமை பெற்ற என்னை உன்னால் ஒன்றும் செய்ய முடியாது.  உனக்காக பூலோகத்தில் பூலோக வாசியாக ஜனனம் செய்கிறேன்.  அங்கு வந்து என்னை பீடித்து கொள்.

தங்கள் உத்தரவு.

சரி... எப்போதில் இருந்து உன் பார்வை படப்போகிறது.?

இன்று முதல்.

அப்படியா?  இப்போதே பூலோக வாசியாக அவதரிக்கிறேன். நீ பூலோகம் வருவாயாக என்று பரமேஸ்வரன் மறைந்து விட்டார்.  

பூலோகத்தில் பூலோகவாசியாக அவதரித்தார். உடன் சனிபகவான் நினைவு வந்தது.  சனி இடம் இருந்து தப்பித்து கொள்ள, தாமரை நிறைந்த தடாகத்தில், தாமரை தண்டினுள் போய் ஒளிந்து கொண்டார்.

மூன்று மாதம் கழிந்தது.  சர்வேஸ்வரன் வெளியே வந்தார்.  அப்போது சனி பகவான் எதிரே தோன்றினார்.

என்ன சனிச்வரா ... உன் கணக்குப்படி மூன்று மாதம் முடிந்து விட்டது.  இனி என்னை பீடிக்க முடியாது.  உன் பிடியில் சிக்காமல் நான் தப்பித்து விட்டேன் பார்த்தாயா?

பிரபு .... நான் கைலாயம் வந்து உங்களை சந்தித்த கணமே என் பீடிகை துவங்கி விட்டது.  அதனால் தான் சர்வலோகத்தையும் அடக்கி ஆளும் நீங்கள் ஒரு சாதாரண மனிதனாக பூலோகத்தில் அவதரித்திர்கள்.

எப்படி பட்டவரையும்,  எவ்வளவு சக்தி படத்தவரையும், இருட்டடிப்பு செய்து இருக்கும் இடம் தெரியாமல் செய்கிற எனக்கு பயந்துதான் தாமரை தண்டில் போய் ஒளிந்திர்கள்.  இப்போது என் காலம் முடிந்து விட்டது,  வெளியே வந்து விட்டிர்கள் என்று சனி பகவான் சிரித்தார்.

உண்மைதான் சனிச்வரா. நீ யாருக்கும் பாரபட்ச்சம் காட்டாதவன் என்பதை உணர்த்தவே இந்த திருவிளையாடலை நாமும்  நடத்தினோம்.  என்று கூறி சிவனும் மறைந்தார். 

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...