ads

Wednesday 11 January 2012

வரமா சாபமா? varamaa saapamaa?



ஜென் குருவை தேடி, அவ்வூரின் செல்வந்தர் ஒருவர் வந்தார்.  ஜென் குருவின் பெயர் ஜென்சாய். விழிப்புணர்வு அடைந்த  ஞானி.  அவரது வார்த்தைகள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் இருக்கும்.

அவரது செற்பழிவை கேட்பதற்கு என்றே வெகு தொலைவில் இருந்து மக்கள் வருவார்கள்.  செல்வந்தர் குருவை மரியாதை செலுத்தி தான் கொண்டு  வந்த பழக்கூடைகளை அவரிடம் கொடுத்தார். 

பின் குருவின் சொற்பழிவுகளை கேட்டு முடித்தவுடன், அவரை நெருங்கி.... குருஜீ ... எனக்கொரு இறுதி வாசகம் எழுதி கொடுங்கள்.  அந்த வாசகம் வாழ்க்கயின் உண்மையை குறிப்பதாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று கேட்டு கொண்டார். 

குருவும் மறுக்காமல் எழுதி கொடுத்தார். 

அந்த தாளில் 

அப்பனும் இறப்பான்...
அவன் பிள்ளையும் இறப்பான்....
அதன் பின் 
அவன் பேரனும் இறப்பான்....
என்று எழுதி இருந்தது. 

என்ன குருஜீ இப்படி எழுதி விட்டீர்கள் என்று வருத்தத்துடன் கேட்டார். 

குரு புன்னகைத்தார்.  

நீ கேட்டது வாழ்வின் உண்மையை.  அழியாத சாசுவத உண்மை இதுதான்,  உன் தாத்தா எப்போதோ இறந்து விட்டார்.  அதன் பின் சில வருடங்கள் கழித்து  உன் தந்தையும் இறந்து விட்டார். 

நீயும் ஒருநாள், நாளையோ, அடுத்த மாதமோ, இல்லை பத்து வருடங்கள் கழித்தோ, அல்லது அதற்கு பின்னரோ இறந்து போவாய்.  அதன் பின் உன் மகனும் எதிர்காலத்தில் ஒரு நாள் மறித்து போவான்.  இதுதானே வாழ்வின் உண்மை. 

உண்மைதான்   குருஜீ.  பிறந்தவர்கள் எல்லோரும் இறப்பார்கள்.  இதை எல்லோருமே அறிவார்கள்.  ஆனால் உங்களை போல் ஞானி மக்களுக்கு வரம் தருவது போல் வார்த்தைகளை சொல்லாமல், சாபம் அளிப்பதுபோல். அப சகுனமாகவா எழுதுவது.  செல்வந்தர் குமுறினார். 

ஞானி சிரித்தார். 

இதுவா... சாபம்.  பெரிய வரமப்பா இது.  சுபமான வார்த்தை.  நன்றாக சிந்தித்து பார்.  முதலில் அப்பன் இறப்பான்,  அடுத்து பிள்ளை இறப்பான்,  அதற்கடுத்து பேரன் இறப்பான் இதுதானே முறை. 

உன் பெற்றோர்கள் நீ அவர்களுக்கு இறுதி சடங்குகளை செய்ய வேண்டும் என்று தானே எதிர்பார்பார்கள். 

நீ மறைந்து உன் மகன் ஈம கடன் செய்வதுதானே முறை.  அதை விடுத்து அவன் இறந்து நீ அவனுக்கு இறுதி கடனை செய்ய வேண்டிய நிலை வந்தால் அது விரும்ப கூடியதாகவா இருக்கும். 

அதல்லவா பாவம்.  அதல்லவா சாபம் என்று சொல்லி வருத்த படலாம். நான் சொன்னது வரமல்லவா. 

மரணம் என்பது இயற்கை .  அது  இயல்பான முறையில் நடந்தாலே சுபமான வரம்.  இறையருள் எல்லாமே. 

ஞானி அந்த வார்த்தையை முடிக்கும் முன்னரே செல்வந்தர் அந்த தாளை எடுத்து கண்களில் ஒற்றிகொண்டார்.
mathivaanan

No comments:

Post a Comment

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...