ads

Thursday 15 December 2011

ஓர் மௌனத்தின் வார்த்தை வலிகள்


இதல்லாம் அழகு
நிலா
பூ
மழை
தென்றல்
மழலை
கவிதை
அனைத்திலும் நீ

என் மனக்கதவை திறக்க
மந்திரம் போட்டவளே
அன்று ஒரு நாள்
உன்னை பார்த்தேன்
இமைகளை இழந்தது கண்கள்
யோசிக்க மறந்தேன்
இல்லை இல்லை
சுவாசிக்க மறந்தேன்.

நீ பார்த்தாய்
மின்னல் கீற்று ஒன்று
என் ஜன்னல் திறந்தது

அந்த பூகம்ப வினாடியில்
நீ நீயாக இருந்தாய்
நான் தான் நானாக இல்லை
கால்கள் இரண்டையும்
கட்டாயமாக பெயர்த்து நகர்ந்தேன்

 ஏன்.... ஏன்....
என்ன ஆனது எனக்கு
இமயமலை என்றல்லவா இறுமாந்திருந்தேன்
என் ஆணி வேர் வரைக்கும் அசைத்தவளே

எனக்கு தெரியும்
நீ நேசிக்கவில்லை
உன் பார்வை பூக்களை
பரிசாய் பெறுவதற்கு
ஓடி வருவேன்.
நீயோ வேற்று கிரகவாசி போல்
விலகி செல்வாய்

அடியே
உன் உதடு சுழிக்கும்
அந்த ஓவிய சிரிப்பை
என்னை பார்த்ததும்
ஏனோ ஒளித்து வைகிறாய்

போடி போ
கருவறை தாண்டும் முன்னே
கல்லறையை பார்த்தது
என் காதல்

இருக்கட்டும் ....
பூக்கள் நேசிக்கவில்லை
என்பதற்காக
வண்டுகள் வருந்துவதில்லை

கரைகள் நேசிக்கவில்லை
என்பதற்காக
அலைகள் அழுவதில்லை

வானம் நேசிக்கவில்லை
என்பதற்காக
நிலவு வ ருந்துவதில்லை
நீ நேசிக்கவில்லை
என்பதற்காக
நான் வருந்தவில்லை

என் உயிர் தொட்டவளே
ஓன்று சொல்வேன்
நீ என்னை நேசிக்க மறக்கலாம்
ஆனால்
உன்னை நேசித்த உள்ளத்தை  மட்டும்
உன்னால் மறக்க முடியாது
என்னை போல.
கவிதை ஆக்கம்:  ஸ்ரீ கிருஷ்ணர்

2 comments:

  1. if guru and ketu is palaced at fifth place ther wont be child? true or

    ReplyDelete
  2. ஹா...ஹா...ஹா யார் அந்த தேவதையோ...தங்களது கற்பனையா நிஜம்தானா...?

    ReplyDelete

குரு பெயர்ச்சி பலன்கள் | Guru peyarchi palangal in tamil

கோட்சார நிலையில் குரு பகவான் நல்ல இடங்கள் என்று சொல்லப்படுகிற 2,5,7,9 க்கு வந்தால் என்ன மாதிரியான பலன்களை தருவார். பெறுகிற யோகங்கள் என்ன என...